மண்ணறைதான் நமது இறுதிப் படுக்கை அறை. யார்தான் மறுப்போம்? ஆனால், மறப்போம். அந்தப் புதைகுழி எங்கோ யாருக்கோ தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த மயானப் பகுதியின் வழியே கடந்துபோகும்போது வெட்டப்பட்ட ஒரு குழியை எட்டிப் பார்த்ததுண்டா? இறங்கிப் படுத்துப் பார்த்ததுண்டா? நம்மோடு கூடவே வந்து கொண்டிருக்கும் மரணத்துடன் தனிமையில் உண்மையாகவே படுத்திருக்கும் ஒரு ஸ்பரிசம் அப்போது பரவத் தொடங்கலாம். ஆனால், அந்தப் புதைகுழியினுள் மறைந்திருக்கும் உலகத்தை நமது பகுத்தறிவின் இருட்டில் கண்டுகொள்ள முடியாது. அதற்கு இறைச்செய்தியின் ஆதாரங்களில் வெளிப்படும் ஒளி நமது இதயங்களில் பாய வேண்டும். அப்போது தெரியும், நம் முன் விரியும் மண்ணறை உலகம் ஓர் ஆறடி அகலக் குழி அல்ல. அதையும் தாண்டி வேதனைகளும் சுகங்களும் ஒரு முன்னோட்டமாகச் சுற்றி வரும் மறுமையின் முதல்கட்ட உலகம் என்று. இதை ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா மரணச் சிந்தனையை வாழ்வியலாக்கும் கோணத்தில் இந்த நூலில் விவரிக்கிறார்.
- 20%
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review