ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் எழுதிய இரண்டு நூல்கள் இதில் உள்ளன. அல் வலா வல் பராஉ பற்றியது ஒன்று. பித்அத்கள் பற்றியது இன்னொன்று. இந்த இரண்டிலும் நமது மார்க்கக் கல்வி மிகவும் பற்றாக்குறையாக இருப்பதாலே பல பெரும்பாவங்களில் விழுகிறோம். யாரிடம் நெருக்கம் கடைப்பிடிப்பது, யாரை வெறுத்து விலகியிருப்பது என்பதை அறியாததால், இஸ்லாமுக்கு முரணான கொள்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் கொண்டிருப்போரிடமும் கலந்துறவாடி வருகிறோம். இதன் விளைவு, எம்மதமும் சம்மதம், மதச்சார்பின்மை, எல்லாமே சரிதான் போன்ற இறைநிராகரிப்புக் கொள்கையில் ஒருவர் கரைந்துபோகிறார். இன்னொருபுறம், மார்க்கத்தின் பெயரால் நுழைந்துள்ள பித்அத்கள், மார்க்கத்தில் பிடிப்புள்ளவரையும் ஏமாற்றி வழிகேட்டில் தள்ளிவிடுகிறது. நபியவர்களோ அவர்களின் தோழர்களோ கொண்டிருக்காத நம்பிக்கைகளையும் செயல்பாடுகளையும் புதுமையாக ஏற்படுத்திய வழிகேடர்கள் தொடர்ந்து பித்அத்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள். முஸ்லிம்கள் அதனிடம் ஏமாந்து பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் கல்வியைப் பெற வேண்டும். அதற்குரிய சுருக்கமான நூல்தான் இது.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review