ஸஹீஹுல் புகாரி கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்
ஹதீஸ் கிரந்தங்கள் வரிசையில் முதன்மையாகத் திகழ்வது ஸஹீஹுல் புகாரி கிரந்தமாகும். அப்பேற்பட்ட கிரந்தத்திற்கு எதிராகவும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை மறுக்கப்படுகின்றன. இது இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் பொதுவாகவும், தமிழுலக பாமர முஸ்லிம்களிடையே குறிப்பாகவும் பல்வேறு சிந்தனைச் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன. தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களை மக்களுக்குத் தெளிவுப்படுத்துவதற்காக எழுதப்பட்ட முக்கியமான விளக்க நூல்.